வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியவர் கைது
இட்டமொழி அருகே வீட்டு ஜன்னலை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி:
பரப்பாடி அருகே உள்ள அண்ணாநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து (70). இவர் அங்குள்ள தனது மகன் மகாராஜன் வீட்டில் இருந்தபோது, அவரது மருமகன் சித்திரைதங்கம் (43) அங்கு வந்தார். அவர் தனது மாமனார் முத்துவை அவதூறாக பேசி கல்லால் வீட்டு ஜன்னலை உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி வழக்குப்பதிவு செய்து சித்திரைதங்கத்தை கைது செய்தார்.