ஆட்டோவை சேதப்படுத்தியவர் கைது
ஆட்டோவை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). வேலுச்சாமி புரத்தை சேர்ந்தவர் ராஜா (30). ஆட்டோ டிரைவர்களான இவர்களுக்கு, தொழில் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சம்பவத்தன்று ஜவகர்பஜார் பகுதியில் முனியப்பன் ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா, முனியப்பனின் ஆட்டோவை அடித்து சேதப்படுத்தி உள்ளார். இதுகுறித்து முனியப்பன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.