அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

முத்துப்பேட்டையை அடுத்த எடையூரில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

Update: 2023-05-22 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51). நேற்று இவர் திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டையை நோக்கி சென்ற அரசு பஸ்சில் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ஒரு சிறிய பிரேம் ஆகியவை வைத்துக்கொண்டு ஏறியுள்ளார். அப்போது அந்த பஸ்சில் நடத்துனராக இருந்த கோபு என்பவர் ராமகிருஷ்ணனிடம் லக்கேஜ் கட்டணம் வசூல் செய்துள்ளார். அதற்கு ராமகிருஷ்ணன் இந்த பொருட்களுக்கு எதற்கு லக்கேஜ் வசூல் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் எடையூர் கடைதெருவில் இறங்கிய ராமகிருஷ்ணன் கட்டையால் பஸ்சின் பின்பகுதி கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். இதனைக்கண்ட டிரைவர் செல்வராஜ், நடத்துனர் கோபு மற்றும் அப்பகுதியினர் ராமகிருஷ்ணனை பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்