ஆட்டோ கண்ணாடியை உடைத்தவர் கைது
ஆட்டோ கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.
உறையூர்:
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சையது (வயது 48). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று அதிகாலை இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி இருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் இவருடைய ஆட்டோவில் உட்கார்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. இதைப்பார்த்த சையது, புருஷோத்தமனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சையதை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவருடைய ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புருஷோத்தமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.