திருடப்பட்ட தங்கத்தை வாங்கியவர் கைது

திருடப்பட்ட தங்கத்தை வாங்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-22 21:47 GMT

நாங்குநேரி:

நாங்குநேரி மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தங்க செயின் பறிப்பு சம்பவங்களில் கைதான நாகர்கோவிலைச் சேர்ந்த மணி (வயது 27) மற்றும் கேரளாவைச் சேர்ந்த அரபாத் (27) ஆகிய இருவரும் சிறையில் உள்ளனர். இருவரும் வழிப்பறி செய்த தங்க நகைகளை நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த சுந்தர் (42) என்பவரிடம் கொடுத்து பணத்தை பெற்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நாங்குநேரி போலீசார் சுந்தரை கைது செய்து அவரிடம் இருந்த, திருடப்பட்ட 2 கிராம் தாலியை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்