போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கி கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கி கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-19 13:51 GMT

வேலூர்

போலி மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கி கொடுத்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் பாஸ்கரன் என்கிற ஆவின் பாஸ்கர் (வயது 46). இவர் போலி சான்றிதழ் மூலம் சிறுவனுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கி கொடுத்ததாக கடந்த மாதம் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆவின் பாஸ்கர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்படி வேலூர் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆவின் பாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை வேலூரில் ஜெயிலில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.


Tags:    

மேலும் செய்திகள்