அரசு போக்குவரத்து ஊழியரை தாக்கியவர் கைது

அரசு போக்குவரத்து ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-07 19:31 GMT

அரசு போக்குவரத்து ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம் பாண்டியன்நகரை சேர்ந்தவர் உமாபதி (வயது 57). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வேலூர் மண்டலத்தில் நேர கட்டுப்பாட்டு அலுவலராக உள்ளார். உமாபதி நேற்று முன்தினம் மாலை வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பணியில் இருந்தார்.

அப்போது அணைக்கட்டை அடுத்த ஒதியத்தூரை சேர்ந்த தனியார் பஸ் புரோக்கர் சுரேஷ் (45) என்பவர் அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் தனியார் பஸ்சை முன்நிறுத்தி பயணிகளை ஏற்றி உள்ளார். இதைக்கண்ட உமாபதி உடனடியாக அந்த பஸ்சை எடுக்கும்படி கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தகாத வார்த்தைகளால் திட்டி உமாபதியை தாக்கி உள்ளார். மேலும் அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உமாபதி வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுரேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்