வாலிபரை தாக்கியவர் கைது

நிலப்பிரச்சினையில் வாலிபரை தாக்கியவர் கைது

Update: 2023-04-18 18:45 GMT

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள நாகம் பூண்டி என்ற ஊரை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் புருஷோத்தமன்(வயது 24). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பலராமன் மகன் சேட்டு(47) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் சேட்டுவின் மகள் சந்தியா வீடு கட்டுவதற்காக பொருட்களை இறக்கினார். இதை புருஷோத்தமன் கண்டித்ததால் அவரை சேட்டு, இவரது மனைவி சிவகாமி, மகன் சரத்குமார்(23) ஆகிய 3 பேரும் சேர்ந்து புருஷோத்தமனை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த புருஷோத்தமன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் சேட்டு உள்பட 3 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்