தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-01 22:42 GMT

நெல்லை அருகே திருத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 53). இவரும், இத்திகுளத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (20) என்பவரும் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். சம்பவத்தன்று இவர்களுக்குள் வேலை செய்யும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் கத்தியால் ரத்தினத்தை தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரத்தினம் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்