ஈரோடு மாமரத்துப்பாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.