உடல் கருகிய நிலையில் கிடந்தவர் சாவு
திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உடல் கருகிய நிலையில் கிடந்தவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உடல் கருகிய நிலையில் கிடந்தவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீக்காயம்
திருவாரூர்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை தண்டலை பெட்ரோல் பங்க் அருகில் கடந்த 31-ந் தேதி உடல் கருகிய நிலையில் தீக்காயங்களுடன் 45 வயது மதிக்கதக்க ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரத்தில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிதாப சாவு
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிருக்கு போராடியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் தனது ஊர் மற்றும் பெயரை மாற்றி மாற்றி கூறினார். இதனால் அவர் யாா்? எந்த ஊரை சேர்ந்தவர்? என கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் உடல் கருகிய நிலையில் கிடந்தவர் சிகிச்்சை பலனின்றி இறந்தார். உயிரிழந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்தாரா? அல்லது முன்விரோதம் காரணமாக எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசாா் விசாரணை நடத்தி வருகிறார்கள்.