திருட்டில் ஈடுபட்டவர் கைது
ஆம்பூர் அருகே திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த முனிசாமி (வயது 53) என்பதும், உமராபாத் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.