கொலை வழக்கில் தொடர்புடையவர் மர்ம சாவு

கொலை வழக்கில் தொடர்புடையவர் மர்ம சாவு

Update: 2022-09-22 21:37 GMT

திருவட்டார்:

திருவட்டார் சந்தை அருகில் நேற்று முன்தினம் இரவில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் திருவட்டாரை அடுத்த ஆனையடியைச்சேர்ந்த ராஜமணி மகன் ரவி (வயது47) என்பது தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு, திருட்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இவர் தற்போது மனநிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

எனவே இவரை யாராவது அடித்ததில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என திருவட்டார் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்