பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-05-10 19:10 GMT

கரூர் மாவட்டம், பெரிய ரெங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவா் சீதாராமன் (வயது 26). இவர் புன்னம் சத்திரம் டாஸ்மாக் கடை அருகே சாலையின் குறுக்கே நின்று கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி தகராறு செய்து கொண்டிருந்தார். இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எச்சரித்தும் அவர் கேட்கவில்லையாம். இதையடுத்து சீதாராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்