தகராறில் ஈடுபட்டவர் கைது

பாளையங்கோட்டையில் தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-27 19:36 GMT

பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). இவர் வீட்டின் அருகில் அதே பகுதியை சேர்ந்த அருண் துரைராஜ் (26) என்பவர் சம்பவத்தன்று வந்து தகராறு செய்து, தகாத வார்த்தையால் பேசி, மிரட்டியும் மேற்கூரையின் ஓடு மற்றும் மின்சார மீட்டரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண் துரைராஜை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்