திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு
திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் எம்.எம். நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 43) என்பவர் வீட்டில் கடந்த 10-ந்தேதி அதிகாலை முன்பக்க சுற்றுச்சுவரின் கதவை திறந்து திருட வந்த குன்னம் தாலுகா, மழவராயநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த சக்திவேல் (46) என்பவரை அக்கம், பக்கத்தினர் பிடிக்க முயன்றனர். இதனால் பீதியடைந்த சக்திவேல் அருகே உள்ள வீட்டின் மாடிக்கு தாவி குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சக்திவேலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமான சக்திவேலை பெரம்பலூர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்கில் சக்திவேல் சம்பந்தப்பட்ட குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.