ஓய்வூதியர்கள் சங்கத்தினர் போராட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர்கள் கோவிந்தராஜன், கனகராசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். சீரான இடைவெளியில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி நிலுவையில் உள்ள இனங்கள் மீது தீர்வு காண வேண்டும். ஊராட்சி ஒன்றிய பணி ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்த வெளியிட்ட அரசாணையை தாமதமின்றி விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.