மின்சாரம் தாக்கி 2 மயில்கள் செத்தன
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 மயில்கள் செத்தன.;
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மஞ்சாவாடி கோம்பூர் வனப்பகுதியில் ஏராளமான, மான்கள், முயல், மயில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இவை உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் போது தெருநாய்கள் துரத்தியும், வாகனங்கள் அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோம்பூர் நாராயணசாமி என்பவரின் தோட்டத்திற்கு வந்த 2 மயில்கள் திடீரென பறக்கும் போது மின் கம்பியில் உரசின. இதில் மின்சாரம் தாக்கி 2 மயில்களும் பரிதாபமாக இறந்தன. இது குறித்த தகவல் அறிந்த அரூர் வனத்துறையினர் விரைந்து வந்து 2 மயில்களையும் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். மயில்கள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.