நெல்கொள்முதல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பணம் வழங்கவில்லை

தோனிமேடு, வெள்ளம்பி ஆகிய பகுதிகளில் நெல்கொள்முதல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதற்கான பணம் இன்னும் வழங்கப்பட வில்லை என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-08-12 18:17 GMT

தோனிமேடு, வெள்ளம்பி ஆகிய பகுதிகளில் நெல்கொள்முதல் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதற்கான பணம் இன்னும் வழங்கப்பட வில்லை என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலவை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தாசில்தார் சமீம் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் இளையராஜா முன்னிலை வகுத்தார். மண்டல துணை தாசில்தார் சத்யா வரவேற்றார்.

இதில் கலவையை சுற்றியுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரில் தெரிவித்தனர். அப்போது கலவை தாலுகாவில் பட்டா பெயர் மாற்றம், சிட்டாவில் பெயர் சேர்ப்பது போன்றவற்றிற்கு மனு கொடுத்தால் உடனடியாக செய்து கொடுப்பதில்லை, திமிரி வேளாண்மை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களும் விதைகளும் இருப்பில் உள்ளதை அதிகாரிகள் தெரிவிப்பதில்லை என புகார் தெரிவித்தனர்.

பணம் வழங்க வில்லை

மேலும் தோனிமேடு, வெள்ளம்பி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் செய்துள்ளது. அதற்கான பணம் இன்னும் வழங்கவில்லை. பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில கடைகளில் யூரியா உரம் வைத்துக் கொண்டு விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கூட்டத்தில் விவசாய சங்க உறுப்பினர்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், மின்வாரிய, நெடுஞ்சாலைத் துறை, பேரூராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்கை வேளாண்மை ஆர்வலர் மாசிலாமணி இலவசமாக தென்னங்கன்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்