தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் - ஜி.கே.வாசன்

தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.;

Update: 2024-03-02 08:00 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தலைமையிலான குழு த.மா.கா. அலுவலகம் சென்று கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ,

தமிழ் மாநில காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும். தேர்தல் குழு அமைத்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடைபெறும்.

முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தொகுதி எண்ணிக்கை குறித்து பேசியுள்ளோம். தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணைய வேண்டும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்