பயணிகள் நிழலகம் தூய்மைப்படுத்தப்பட்டது
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே இருந்த பயணிகள் நிழலகம் தூய்மைப்படுத்தப்பட்டது.
தினத்தந்தி செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே இருந்த பயணிகள் நிழலகம் தூய்மைப்படுத்தப்பட்டது.
பயணிகள் நிழலகம்
மயிலாடுதுறை மாவட்ட அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள பயணிகள் நிழலகத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக கிடந்தது. இதன் காரணமாக பயணிகள் நிழலகம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது. இதனால் அந்த நிழலகத்தை பயணிகள் யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். இதை சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் ேநற்று படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உடனடியாக அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பயணிகள் நிழலகத்தை தூய்மைப்படுத்த உத்தரவிட்டார்.
தூய்மைப்படுத்தப்பட்டது
அதன்பேரில் நேற்று தூய்மை பணியாளர்கள் பயணிகள் நிழலகத்தில் கிடந்த குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர். பின்னர் அங்கு கிருமி நாசினி தெளித்தனர்.மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி கூறுயைில், மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பயணிகள் நிழலகம் அசுத்தமாக உள்ளது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவந்த 'தினத்தந்தி'க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது அந்த பயணிகள் நிழலகம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இருக்கைகள் அமைக்க மதிப்பீடு
மேலும் அந்த பயணிகள் நிழலகத்தில் புதிதாக இருக்கைகள் அமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு புதிய இருக்கைகள் அமைப்பதோடு தொடர்ந்து பஸ் நிறுத்தம் தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும், செய்திவெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.