பராமரிப்பில்லாத நகராட்சி பூங்கா

பராமரிப்பில்லாத நகராட்சி பூங்கா

Update: 2023-05-25 10:15 GMT

தளி

உடுமலை நகராட்சி 4-வது வார்டு பகுதியில் அபிராமி நகர் உள்ளது. இங்கு குழந்தைகள் பயன்பெறும் வகையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் பூங்காவிற்கு சென்று நடை பயிற்சியில் ஈடுபட்டனர். குழந்தைகளும் அங்கு அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் பூங்காவில் முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை. இதனால் புங்கா புதர் மண்டி உள்ளதுடன் உபகரணங்களும் சேதம் அடைந்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பூங்கா புதர் மண்டி கிடப்பதால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் பொதுமக்கள் குழந்தைகள் பூங்காவை பயன்படுத்துவதற்கு அச்சம் அடைந்தனர். எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் உள்ள அபிராமி நகரில் அமைக்கப்பட்ட பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்