விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம்
கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கங்காகுளம் அருகே உள்ள பிள்ளையார்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.