பஞ்சாயத்து தலைவியின் கார் தீப்பிடித்து எரிந்தது

நெல்லையில் பஞ்சாயத்து தலைவியின் கார் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2023-01-17 22:05 GMT

நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலையை சேர்ந்தவர் துரை. இவர் நேற்று தனது நண்பருடன் தனது அத்தை நாங்குநேரி மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவி சாந்தகுமாரியின் காரில் நெல்லையில் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்தார். தியேட்டரில் இவருடைய நண்பர்கள் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது துரை மாத்திரை வாங்குவதற்காக நெல்லை சந்திப்பில் உள்ள மருந்து கடைக்கு வந்தார். அப்போது காரை மதுரை ரோட்டில் போலீஸ் குடியிருப்பு அருகே நிறுத்தி இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கு நின்றவர்கள் தீயை அணைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் எப்படி தீ பிடித்தது என்று விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்