ஹவுசிங் போர்டு பகுதியில் ரூ.1½ கோடியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் ஊராட்சி தலைவர் கோரிக்கை

ஹவுசிங் போர்டு பகுதியில் ரூ.1½ கோடியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என சீக்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சியாமளா தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-02-18 18:36 GMT

ஹவுசிங் போர்டு பகுதியில் ரூ.1½ கோடியில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என சீக்கராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சியாமளா தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திட்டப்பணிகள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்தில் சீக்கராஜபுரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக எஸ்.சியாமளா தினகரன் உள்ளார். ஊராட்சியில் நடைபெற்ற திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

15-வது நிதிக்குழு மானியம் மூலமாக அண்ணாநகர், கவுசிக் நகர், சீக்கராஜபுரம், பல்லவன் நகர், தென்றல் நகர், புரட்சித்தலைவர் நகர், மோட்டூர் ஆகிய பகுதிகளில் ரூ.4 லட்சத்து 87 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு, பொன்னை ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி சீக்கராஜபுரம், சீக்கராஜபுரம் காலனி, ஹவுசிங் போர்டு பகுதிகளுக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்தில் குடிநீர் வினியோகம், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் சுகாதார உபகரணங்கள் வாங்கியது, பிரதான குழாயில் இருந்து ஸ்ரீராம் நகருக்கு ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்தில் குடிநீர் வினியோகம், அண்ணாநகர் பிள்ளையார் கோவில் தெரு, பெல் அண்ணாநகர் குறுக்கு தெருக்களில் ரூ.8 லட்சத்து 43 ஆயிரத்து 200 மதிப்பில் சாலை, சீக்கராஜபுரத்தில் ரூ.2 லட்சத்தில் உரக்குழி, பெல் அண்ணா நகரில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு 7 பணிகள் முடிந்துள்ளது.

தார்சாலை

ஸ்ரீராம் நகரில் ரூ.5 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், தார்சாலை பணி நடைபெற்று வருகிறது. புரட்சித்தலைவர் நகர் மாரியம்மன் கோவில் தெரு, 3-வது தெரு ஆகிய இடங்களில் ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

புரட்சித்தலைவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.66 ஆயிரம், ஸ்ரீராம் நகர் முதல் தெருவில் ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், சீக்கராஜபுரம் காலனியில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு, அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற உள்ளது.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீக்கராஜபுரத்தில் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட உள்ளது. மோட்டூரில் ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்தில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம், மோட்டூரில் ரூ.10 லட்சத்தில் பஞ்சமூடு குளத்தை தூர்வாருதல், தடுப்புச்சுவர் அமைத்தல், குளியலறை, தொட்டியின் மேல் படிக்கட்டுகள் கட்டுதல், மோட்டூரில் ரூ.8½ லட்சத்தில் நெற்களம், ஸ்ரீராம் நகரில் ரூ.7 லட்சத்து 8 ஆயிரம், ஸ்ரீராம் நகர் 3-வது தெருவில் ரூ.6 லட்சத்து 48 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நம்ம ஊரு, நம்ம கையில்

வெள்ளத்தில் ஆற்றின் உறைக்கிணறுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் 2 நாட்களில் 6 ஆழ்துளை கிணறுகள் அமைத்து 13 குக்கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கினேன். 100 நாள் பணியாளர்களை கொண்டு 3 ஆயிரம் முருங்கை மரக்கன்றுகள் வீடு வீடாக வழங்கப்பட்டது. 2 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவ முகாம், தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் பொது மருத்துவ முகாம்கள் 3 முறை நடத்தி இருக்கிறோம். ஊராட்சியில் 50 ஆயிரம் பனை விதைகள் நட்டு உள்ளோம். "நம்ம ஊரு நம்ம கையில்'' என்ற செயலியை ஆரம்பித்து மக்களை கொண்டு மாதம் ஒருமுறை ஊரை சுத்தம் செய்கிறோம். தினமும் குப்பைகளை பெற்று தரம் பிரித்து மாதம் 2 டன் நெகிழி கழிவுகளை தார் வேதிப்பொருள் பிரித்தெடுத்தலுக்கு அனுப்புகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர்கள் இறந்தால், குடும்பத்தினருக்கு ஊராட்சி நிதியில் ரூ.5000 வழங்குகிறோம். 1500 பேருக்கு முதல்-அமைச்சரின் காப்பீடு அட்டை, 60 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 15 பேருக்கு விதவை உதவித்தொகை வாங்கி கொடுத்துள்ளோம்.

வரிபாக்கி

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் கட்டும் பணி தொடங்க உள்ளோம். 2500 மகாகனி, கடம்பா மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி திறக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள், குடிநீர், கழிவுநீர் கால்வாய் அடைப்பு பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கிறேன்.

எரிமேடையுடன் கூடிய பொது சுடுகாடு, ஆதிதிராவிடர் மயானத்திற்கு செல்ல புதிய பாதை அமைத்து தர வேண்டும், ஹவுசிங் போர்டு பகுதியில் ரூ.1½ கோடியில் தார் சாலை அமைத்து தர வேண்டும், பெல் நிறுவனத்தின் தொழில் வரி, குடியிருப்பு வரி பாக்கி உள்ளது. அதனை உடனடியாக கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன்.

அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், மாவட்ட கவுன்சிலர் பா.செல்வம், ஒன்றிய கவுன்சிலர் துளசி சங்கர் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி.ஐஸ்வர்யா சிதம்பரம் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் 9 பேர் மற்றும் ஊராட்சி எழுத்தர் பி.புண்ணியகோடி ஆகியோருடன் இணைந்து மக்கள் பணியை திறம்பட செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்