பணியின் போது தவறி விழுந்த பெயிண்டர் பலி
பணியின் போது தவறி விழுந்த பெயிண்டர் பலியானார்.
சிவகாசி,
சிவகாசி கிழக்கு பகத்சிங் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 53). பெயிண்டர். இந்தநிலையில் இவர் சம்பவத்தன்று சுப்பிரமணியபுரம் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சாரம் கட்டி அதன் மேல் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதனை செய்த போது கணேசன் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.