விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பலி
விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியானார்.
அறந்தாங்கி அருகே நாகுடியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 38). இவர் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் செந்தில்வேல் கருங்குழிகாடு பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் (60) என்பவர் ஓட்டிவந்த சைக்கிள் மீது செந்தில்வேல் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அர்ஜூனன் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், செந்தில்வேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில்வேல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.