விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் சாவு

விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-10-26 19:45 GMT

நல்லம்பள்ளி:-

பென்னாகரம் பழையூர் கொண்டையனஹள்ளி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி செல்வபதி (வயது 31). இவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்திருப்பதாகவும், நேற்று தொப்பூர் பகுதியில் புதிதாக வெல்டிங் கடை வைப்பதற்காக பார்த்துவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு மொபட் மூலம் வந்து கொண்டிருந்தார். அதியமான்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை புறவடை ஜங்ஷன் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதில் செல்வபதி காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்