பொள்ளாச்சி பொள்ளாச்சி பகுதியில் ஓணம் பண்டிகை கோலாகலம்
பொள்ளாச்சி பகுதியில் ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி அவர்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் ஓணம் பண்டிகையை கேரள மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதையொட்டி அவர்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.
கோவிலில் சிறப்பு பூஜை
மாவேலி மன்னர் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் நாட்டை காண வருகிறார் என்பது கேரள மக்களின் ஜதீகம். அவரை வரவேற்க ஆண்டுதோறும் கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணத்தையொட்டி வீட்டில் விருந்து தயார் செய்து உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினருக்கு கொடுப்பார்கள்.
மேலும் வீட்டின் முன் பல்வேறு வகையான வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்வார்கள். கேரளாவில் பண்டிகை ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி வெங்கடேசா காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சியில் வசிக்கும் கேரள மக்கள் கூறியதாவது:-
பண்டிகை கொண்டாட்டம்
ஆண்டுதோறும் ஓணத்திற்கு வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து, பண்டிகையை கொண்டாடுவோம். கொரோனாவிற்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளாக தான் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
மேலும் இந்த ஆண்டு பூக்கள் விலை குறைவாக இருந்ததால், அதிகமாக பூக்களை வாங்கி வீடுகளில் கோலமிட்டு பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களை வீடுகளுக்கு அழைத்து ஓணத்தையொட்டி விருந்து கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.