ஆம்னி பஸ் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது
சேத்தியாத்தோப்பு அருகே ஆம்னி பஸ் வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது 20 பயணிகள் காயம்
சேத்தியாதோப்பு
கும்பகோணத்தில் இருந்து நேற்று காலையில் ஆம்னிபஸ் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கரைமேடு அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டு்ப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து கூச்சல் எழுப்பினர். இதைப்பார்த்து அந்த வழியாக வந்த பொதுமக்கள் காயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 20 பயணிகள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.