டயர் வெடித்து பள்ளத்தில் இறங்கிய ஆம்னி பஸ்

டயர் வெடித்து பள்ளத்தில் ஆம்னி பஸ் இறங்கியது.

Update: 2023-04-16 18:39 GMT

சென்னையில் இருந்து புதுச்சேரி பதிவு எண் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ் திருச்சி, புதுக்கோட்டை வழியாக பயணிகளை ஏற்றிக் கொண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நோக்கி திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்துள்ள சவேரியார்புரம் செக்போஸ்ட் அருகே நேற்று அதிகாலை பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது ஆம்னி பஸ் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சிறிய கோவில் ஒன்றை இடித்துக் கொண்டு பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர், பயணிகள் உள்பட அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்