கஞ்சா விற்ற மூதாட்டி சிக்கினார்
வீரபாண்டியில் கஞ்சா விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்
வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையில் போலீசார் வயல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சவுடாம்பிகை கோவில் தெருவை சேர்ந்த தனலட்சுமி (வயது 64) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.