மயங்கி கிடந்த மூதாட்டி சாவு
வேளாங்கண்ணி அருகே மயங்கி கிடந்த மூதாட்டி சாவு;
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே உள்ள பரவை சந்தையில் சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.