ஏரலில் பஸ்சில் மூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த மாணவிகள்

ஏரலில் பஸ்சில் மூதாட்டி தவறவிட்ட நகையை ஒப்படைத்த மாணவிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2022-09-06 11:25 GMT

ஏரல்:

ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நேற்று முன்தினம் காலையில் சிறுத்தொண்டநல்லூருக்கு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சென்றனர். அப்போது பஸ்சுக்குள் ஒரு பை கிடப்பதை 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவி பார்த்து எடுத்துள்ளனர். அதில் தங்க நகை இருப்பதை பார்த்த அந்த மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா மேரியிடம் தங்கைநகையுடன் பையை ஒப்படைத்தனர். இதை அடுத்து தலைமை ஆசிரியர் ஏரல் போலீசில் அந்த நகையை ஒப்படைத்தார். பையில் 2½ பவுன் நகை இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருவழுதிநாடார்விளை சேர்மன் கோவில் தெருவை சேர்ந்த மூதாட்டி லட்சுமி பையுடன் நகையை பஸ்சில் தவறவிட்டு சென்றது தெரிய வந்தது. அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார் நகையை ஒப்படைத்தனர். அந்த நகையை மீட்டு கொடுத்த மாணவிகள் மைக்கேல் சாதனா, பவித்ரா தேவியை ஏரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா மேரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வில்சன் வெள்ளையா, பொருளாளர் புஷ்பம் ரமேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்