மூச்சு திணறி மூதாட்டி சாவு

குடியாத்தத்தில் சாம்பிராணி புகை போட்டபோது மூச்சு திணறி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-07 18:14 GMT

குடியாத்தம்

குடியாத்தத்தில் சாம்பிராணி புகை போட்டபோது மூச்சு திணறி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

சாம்பிராணி புகை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்பாடிரோடு காந்திநகர் ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 71). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

மகள் திருமணமாகி கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார். சண்முகம் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று இருந்ததால் வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இரவு வீட்டில் பூஜை செய்ய ராஜேஸ்வரி சாம்பிராணி புகை போட்டுள்ளார். அப்போது புகை அதிகமானதால் பயந்து கொண்டு குளியல் அறைக்குள் போய் உள்ளார்.

மூச்சு திணறி சாவு

அங்கும் புகைமூட்டம் அதிகமாகி மூச்சு திணறி அங்கேயே மயங்கி விழுந்தார். இதனிடையே ராஜேஸ்வரி வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து புகையில் மயங்கிய நிலையில் இருந்த ராஜேஸ்வரியை மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து ராஜேஸ்வரியை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மூச்சு திணறி இறந்து விட்டது தெரிய வந்தது.

பின்னர் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் ராஜேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்