பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு அலுவலர், பணியாளர்கள் உரிமை நவ சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-12-18 15:56 GMT

திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு அரசு அலுவலர்-பணியாளர்கள் உரிமை நல சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மு.பிரபு தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பி.விஜயா, செயற்குழு உறுப்பினர் அ.பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ப.முருகன் வரவேற்றார். மாநில தலைவர் கு.பொன்மலை தொடக்கவுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர்கள் சமூக நீதிப்பேரவை தலைவர் க.பாலு, சமூக முன்னேற்ற சங்க தலைவர் ச.சிவபிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் பதவி உயர்வு பிரச்சினை, முதுநிலை பட்டியல் வெளியிடுவதில் உள்ள முரண்பாடுகள், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் உரிமை நலச்சங்கத்தின் மாநில செயலாளர் செ.சரவணபெருமாள், பொருளாளர் அ.பெரியண்ணன், துணை செயலாளர் இரா.தினகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்