போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போடியை அடுத்த சங்கராபுரம் தண்ணீர் தொட்டி அருகே மாட்டு வண்டி ஒன்று வந்தது. அதனை மறித்து சோதனை செய்தபோது அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. மாட்டு வண்டியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது 68) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.