முதியவர் சாவு; மகன் கைது

முதியவர் உயிரிழந்த வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-07-16 18:40 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ந்தேதி காலை வீட்டில் இருந்தபோது கோபாலின் இளைய மகன் சாமிநாதன்(40) என்பவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை கோபால் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் சாமிநாதனுக்கும், அவரது தந்தை கோபாலுக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபால் கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்துள்ளார். எழுந்திருக்க முடியாமல் எழுந்திருந்த கோபாலை அவரது மகன் சாமிநாதன் பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த கோபால் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கோபால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கோபாலின் மூத்த மகன் சுப்ரமணியன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் முதியவர் கோபாலை தள்ளிவிட்ட சாமிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்