கழுதை காலால் உதைத்து முதியவர் சாவு

தட்டார்மடம் அருகேகழுதை காலால் உதைத்ததில் படுகாயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-01-16 18:45 GMT

தட்டார் மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள முதலூர் பங்களா தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 80). தென்னம்தட்டி முனையும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டு முன்பு நின்ற கழுதையை விரட்டி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கழுதை அவரை காலால் எட்டி உதைத்து விட்டு ஓடியுள்ளது. இதில் அவர் தலைக்குப்புற கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் சீயோன் பிரபு தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

கழுதை காலால் எட்டி உதைத்ததில் முதியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்