முதியவர் சாவு? போலீஸ் விசாரணை

முதியவர் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-13 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த இளையான்குடி போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இறந்த முதியவர் கருப்பு கலர் டீசர்ட், ஊதா கலர் கைலி அணிந்திருந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்