மலைதேனீக்கள் கொட்டி முதியவர் சாவு
மலைதேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழந்தார்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணக்கரைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 70). சம்பவத்தன்று இவருடைய தோட்டத்தில் விவசாய வேலைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த மலைதேனீக்கள் பறந்து வந்து ராமனை கொட்டியது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.