கொடைக்கானலில் அதிகரித்த உறைபனியின் தாக்கம் - சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

கொடைக்கானலில் கடும் உறை பனி காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

Update: 2023-02-19 09:25 GMT

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த ஆண்டு துவக்கத்தில் விடுமுறை நாட்களையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொடைக்கானலில் கடும் உறை பனி ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்து வருகின்றனர். தற்போது மேலும் உறை பனி ஏற்பட்டு நட்சத்திர ஏரி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பரவியுள்ளது.

வயல்வெளிகளில் வெள்ளைப்போர்வை போர்த்தியது போல் எங்குபார்த்தாலும் பனித்துளிகள் காணப்படுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. அங்குள்ள பில்லர்ராக், பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

அடுத்ததாக மார்ச் மாத இறுதியில் கோடைக்காலம் தொடங்க இருக்கிறது. மேலும் பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறையும் விடப்படும் என்பதால் அடுத்த ஓரிரு மாதங்களில் கொடைக்கானலில் மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Full View


Tags:    

மேலும் செய்திகள்