கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 661 ஆக உயர்வு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-07 21:19 GMT

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அலட்சியத்தால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 779 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று புதிதாக 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64 பேர் பூரண குணமடைந்துள்ளனர். 661 பேர் மருத்துவமனைகளிலும், தங்கள் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்