'மகளிர் கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை' - அமைச்சர் சிவசங்கர்

ஆட்சிப்பொறுப்பேற்ற போது ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள் தொடர்ந்து இயங்கி வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.;

Update: 2023-08-16 17:18 GMT

கோவை,

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்படவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற போது ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

கடந்த ஆட்சிக்காலத்தில் புதிதாக பணியாளர்களை நியமிக்காமல் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதில் சுமார் 800 பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள பேருந்துகளையும் இயக்குவதற்கு புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கான நடைமுறை துவங்கி இருக்கிறது. அந்த பணி நியமனங்கள் நடைபெறும் போது அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வரும்" என்று தெரிவித்தார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்