நாகை எம்.பி. செல்வராஜ் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

நாகை எம்.பி. செல்வராஜின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update:2024-05-13 09:44 IST

சென்னை,

நாகை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. செல்வராஜ் (67 வயது) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாகை எம்.பி. செல்வராஜின் மறைவுக்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

செல்வராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்