புதிய அபராத கட்டணம் ஓரிரு நாளில் நடைமுறைக்கு வரும்

புதிய அபராத கட்டணம் ஓரிரு நாளில் நடைமுறைக்கு வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-11-06 17:33 GMT

தமிழகத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களுக்கு அபராத கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த புதிய அபராத கட்டணம் கடந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் வாகனங்களுக்கு புதிய அபராத கட்டணம் ஓரிருநாளில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து வேலூர் போக்குவரத்து போலீசார் கூறுகையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி போக்குவரத்து விதியை மீறும் வாகனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த அபராதத்தை விட தற்போது கூடுதல் கட்டணம் அபராதமாக விதிக்கப்படுகிறது. எனவே இதுதொடர்பாக ஆட்டோ சங்க நிர்வாகிகள், இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பவர்கள், வாகன ஓட்டிகளுக்கு துண்டுபிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பழைய, புதிய அபராத கட்டணம் அடங்கிய பேனர் வேலூர் நகரின் முக்கிய பகுதிகளில் வாகன ஓட்டிகள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத கட்டணம் விதித்து வருகிறார்கள். ஆனால் வேலூர் போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில் இதுவரை புதிய அபராத கட்டணம் விதிக்கப்படவில்லை. தற்போது போதுமான அளவு விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளதால் புதிய அபராத கட்டணம் ஓரிருநாளில் நடைமுறைக்கு வரும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்