சுதந்திர தின விழா: மூவண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் தர்கா
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகூர் தர்கா மூவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.;
நாகப்பட்டினம்:
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முகப்பு பகுதி நேற்று முதல் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.