மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர்

மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவானார்.

Update: 2022-11-13 18:21 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையை அடுத்த ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மகன் விஸ்வநாதன் (வயது 23). இவர் நேற்று காலை 11 மணி அளவில் தந்தை சுந்தரத்தை அழைத்துக் கொண்டு காட்பாடி தாலுகா திருவலம் பஜார் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு மருத்துவமனை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனை உள்ளே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வெளியே வந்துள்ளனர்.

அப்போது தங்கள் மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இதுகுறித்து திருவலம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் திருவலம் போலீசார் மருத்துவமனை மருந்தகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் அதில் மோட்டார்சைக்கிளை ஒருவர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அதை வைத்து மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்