திருடிய பொருட்களை மீண்டும் அதே இடத்தில் போட்டு சென்ற மர்மநபர்

பாவூா்சத்திரம் அருகே தோட்டத்தில் திருடிய பொருட்களை மீண்டும் அதே இடத்தில் மர்மநபர் போட்டுச் சென்றார்.

Update: 2023-07-18 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள பூபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் நீல்செல்வகுமார் (வயது 41). இவருக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இவர் அங்குள்ள மோட்டார் அறையை பூட்டி விட்டு, சாவியை அப்பகுதியில் ஒரு இடத்தில் வைத்துவிட்டு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

கடந்த 10-ந் தேதி இரவும் சாவியை அங்கேயே வைத்து விட்டு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, மோட்டார் அறையில் இருந்த மரம் வெட்டும் எந்திரம், மருந்து தெளிக்கும் எந்திரம், எடை பார்க்கும் எந்திரம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நீல்செல்வகுமார் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் திருட்டு போன அனைத்து பொருள்கள் ஒரு சாக்கு மூட்டையில் வைத்து, கட்டப்பட்ட நிலையில் மோட்டாா் அறை பகுதியில் கிடந்தது. இதை பார்த்து நீல்செல்வகுமார் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த பொருட்களை திருடிய சென்ற மர்மநபரே மீண்டும் வந்து பொருட்களை ேபாட்டு சென்றது தெரியவந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்