மாயமான முதியவர் ஏரிக்கால்வாயில் பிணமாக கிடந்தார்

நெமிலி அருகே மாயமான முதியவர் ஏரிக்கால்வாயில் பிணமாக கிடந்தார்;

Update: 2022-07-04 17:48 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அகவலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுவேட்டாங்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 63). இவர் தினமும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்று வந்தார். கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த மனைவி, மகன், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் 6 நாட்களாக அவரை காணவில்லை.

இந்த நிலையில் அகவலம் மோட்டூரில் விவசாய நிலத்துக்கு அருகில் உள்ள ஏரிக்கால்வாயில் ஆண் பிணம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் நெமிலி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் மேட்டுவேட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த மோகன் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்